இன்று புதன்கிழமை காலை (22) யாழ்ப்பாணத்தின் செம்மணி மனிதப் புதைகுழி பகுதியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் அடங்கிய பிரதிநிதிகள் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட்டனர்.
அப்பிரதிநிதிகளிடம், எமக்கு உள்நாட்டு நீதி விசாரணளகளில் நம்பிக்கையில்லை, செம்மணி உள்ளிட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கும் சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதை வலியுறுத்தியே மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இராணுவப் புலனாய்வாளர்கள், விசேட அதிரடிப்படையினர், பொலிஸாரின் தீவிர கண்காணிப்புக்கு மத்தியில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், தமீழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
