இலங்கையின் மிகவும் வயதான பெண்மணி காலமானார்

இலங்கையின் வாழும் மிகவும் வயதான பெண்களில் ஒருவராகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டவரும் அனுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதரவாவைச் சேர்ந்தவருமான பஞ்சகே கலுமெனிகே தனது 114ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

1912ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி பிறந்த கலுமெனிகே இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது 114ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

அதன் பின்னர் அவர் கீழே விழுந்து அறுவை சிகிச்சைக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அறுவை சிகிச்சைக்குப் பின் இரண்டு மாதங்கள் உயிர் வாழ்ந்தபோதிலும் இறுதியில் அவர் உயிரிழந்துள்ளார்.

கலுமெனிகே  12 பிள்ளைகளையும் 325 கொள்ளுப்பேரக்குழந்தைகளைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.