கட்டார் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவையொட்டி கொழும்பிலுள்ள கட்டார் தூதரகத்துக்கு இன்று (14) செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
இதன்போது இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஹமத் முகமது அப்துல்லா அல்-சனாத் அல்-தோசாரியைச் சந்தித்த பிரதி அமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
முன்னாள் அமீரின் சிறந்த தலைமைத்துவத்தையும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு கட்டாரில் அவர் பெற்றுக்கொடுத்த நல்வாய்ப்புகளையும் நன்றியுடன் நினைவுகூர்ந்த பிரதி அமைச்சர் இந்தத் துயரமான வேளையில் இலங்கை கட்டார் மக்களுடன் எப்போதும் துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டார்.

