யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்று வரும் மனித என்புக்கூட்டுப் புதைகுழி அகழ்வுப் பணிகளை , ஐரோப்பிய ஒன்றியத் தூதர் கார்மென் மொரேனோ தலைமையிலான இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து நாடுகளின் தூதுக்குழு இன்று புதன்கிழமை (22) செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் சென்று பார்வையிட்டனர்.
செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த பயணத்திற்காக நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் அகழ்வுப் பணிகளில் இதுவரை 437 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 428 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், அகழ்வின்போது ஆபரணங்கள் உள்ளிட்ட பல சான்றுப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்தே இந்த செம்மணி மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் பார்வையிட்டனர்.



