கதிர்காமத் திருத்தலத்தின் ஆடிவேல் விழா கொடியேற்ற நிகழ்வு, புதன்கிழமை (15) மாலை 4 மணிக்கு திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறும் இவ்விழா, எதிர்வரும் 30 ஆம் திகதி மாணிக்க கங்கையில் நடைபெறும் பாரம்பரிய நீர்வெட்டு (தீர்த்தோற்சவம்) நிகழ்வுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இவ்விழாவைக் காண்பதற்காகப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டிருந்தனர்.
.







