நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு முன்பாக கூச்சலிடும் கைதிகளின் உறவினர்கள்! கலகமடக்கும் பொலிஸார்

நீர்கொழும்பு சிறைச்சாலையில்  நேற்று முன்தினம் மற்றும் நேற்றையதினம் ஆகிய இரு தினங்களில் ஏற்பட்ட கடும் கலவரத்தில் 26 பேர் வரையில் உயிரிழந்ததுடன் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.

நேற்று மாலை கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர்  சிறைச்சாலையில் இருந்த கைதிகள் ஏனைய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

இன்று காலை மீண்டும் சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்று திரண்டுள்ள கைதிகள் தமது உறவினர்களைக் காண வேண்டும் என கூச்சலிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில்  சிறைச்சாலை வளாகத்தில் ஒன்று திரண்டுள்ள கைதிகளின் உறவினர்களால் சற்று பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலவரத்தின் பின்னர் நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.