2026ம் ஆண்டிற்கான தேசிய இளைஞர் கபடி சம்பியன் சுற்றில் அம்பாறை வெற்றி

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் மாகாண விளையாட்டு துறை அமைச்சு, இலங்கை இளைஞர் கழக யூத் கிளப் சம்மேளனம் ஆகியன இணைந்து நாடத்தும் 36வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் ஆண் பெண் இருபாலருக்குமான தேசிய மட்ட கபடி போட்டிகள் மாத்தறை மாவட்டத்தின் கொட்டுவில உள்ளக அரங்கில் இடம்பெற்றது

இந்தப் போட்டியில் ஆண்கள் அணியில் அம்பாறை மாவட்ட ஆடவர் கபடி அணி 2026ம் வருடத்தின் தேசிய (Youth) சம்பியன் ஆனது.

இதேவேளை மகளீருக்கான சுற்றுப் போட்டியில் யாழ் மகளீர் அணி வெற்றிவாகை சூடியது.