13 இலட்சத்தைக் கடந்தது சுற்றுலாப் பயணிகளின் வருகை: முதலிடத்தில் இந்தியா!


நாட்டுக்கு வருகை தரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டில் இதுவரை 13 இலட்சத்தைக் கடந்துள்ளதாக  சுற்றுலா வளர்ச்சி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மொத்தம் 1,313,974 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.  ஜூலை மாதத்தின் முதல் 26 நாட்களில் மட்டும் 167,401 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக இந்தியாவிலிருந்து 38,785 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து, முதன்மைச் சந்தையாகத் திகழ்கிறது. 

இந்த ஆண்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 310,000க்கும் அதிகமான இந்தியச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.