நெய்தல் நகர் பகுதியில் தற்போது வீதிப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் போது, வீதியோரமாகப் போத்தல் ஒன்றில் அடைக்கப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த இரண்டு கைக்குண்டுகள்; தொழிலாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, வீதிப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் உடனடியாக இது குறித்து மூதூர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், அப்பகுதிக்கான பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளனர்.
