தன்சல் வரிசையில் நின்றவர்கள் மீது கெப் மோதி விபத்து - 6 பேர் பலி

மதுபோதையில் வாகனத்தை செலுத்தி வீதியோரம் நின்றிருந்த 6 பேரின் உயிரைப் பறித்த நபர் - இலங்கையை உலுக்கிய  சம்பவம்

வெசாக் கொண்டாட்டத்தின் நடுவே கொழும்பில் நிகழ்ந்த பெருஞ்சோகம் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த சொகுசு கப் வாகனம் 6 பேர் பரிதாப பலி!
வெசாக் பண்டிகை கொண்டாட்டங்களின் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்த கொழும்பு – மீகொட பகுதி, கணப்பொழுதில் மரண ஓலமாக மாறிய அதிதிர்ச்சியூட்டும் விபத்து ஒன்று பதிவாகியுள்ளது.

ஹோமாகம நோக்கி அதிவேகமாகப் பயணித்த சொகுசு கப் (ஊயடி) ரக வாகனம் ஒன்று, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், வீதியை விட்டு விலகி வெசாக் தானசாலை (வட்டாரம சந்தி அருகில்) மற்றும் அலங்காரங்களை ரசிப்பதற்காக வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்திற்குள் “மின்னல் வேகத்தில்" புகுந்து மோதியுள்ளது.

மோதிய வேகத்தில் அங்கிருந்த தற்காலிகக் கூடாரங்கள் தரைமட்டமாகியதுடன், நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களும் நசுங்கின. சம்பவ இடத்திலேயே மக்கள் தூக்கி வீசப்பட்டதாக நேரில் கண்டவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

இந்த கொடூர விபத்தில் சிக்கி 3 பெண்கள் உட்பட 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  (உயிரிழந்தவர்கள் 23 முதல் 63 வயதுக்கு இடைப்பட்ட மீகொட பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்).
வைத்தியசாலையில் போராட்டம் - விபத்தில் படுகாயமடைந்த 12-க்கும் மேற்பட்டோர் உடனடியாக ஹோமாகம தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

விபத்தை ஏற்படுத்திய உடனே, கோழைத்தனமாக சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய கப் வாகனத்தின் சாரதி, மீகொட பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.விபத்தின் போது சாரதி கடுமையான மதுபோதையில் இருந்தாரா அல்லது தூக்கக் கலக்கம் காரணமா என்பது குறித்து பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.