கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முறுத்தானை கிராமத்தில் தரம் -05 கல்வியை கற்றதன் பின்னர் கல்வியை தொடரமுடியாத 25 மாணவர்களுக்கு "Catch-up" முறையில் கற்பித்தல் செயன்முறை உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் கிரான் பிரதேச செயலகம் மற்றும் கல்குடா வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைந்து CERI நிறுவனத்ததின் அனுசரணையுடன் இடம் பெருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



