தேசிய நீர் வளங்கள் சபையின் தலைவர் திரு ஆர்.எம். எஸ் பண்டார அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம்
பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (04.05.2024) யாழ்ப்பாண மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலத்தடி நீர் மாசுபட்டுவருவதாகவும், அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டதுடன்,
குழாய் கிணறுகள் அனுமதியின்றி அமைக்கப்பட்டுவருவதாகவும் அரசாங்க அதிபரால் தேசிய நீர் வளங்கள் சபையின் தலைவரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன்போது தற்போது யாழ்ப்பாணத்தில் கிணற்று நீரை பரிசோதிப்பது அதிகரித்துள்ளதாகவும், மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாகவும் தலைவரால் தெரிவிக்கப்பட்டதுடன், நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டிய அவசியம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.



