அம்பாறை பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேகநபர் தொடர்பில் பிபில பகுதியைச் சேர்ந்த இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்
இதன்போது சந்தேகநபரின் கைப்பேசியை ஆய்வு செய்தபோது,சுமார் 700 இளம் பெண்களின் தொலைபேசி எண்கள் மேலும் சிலரின் தனிப்பட்ட படங்கள் விசாரணை அதிகாரிகளால் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் தெரியவந்ததாவது,
ஆரம்பத்தில் பெண்களுடன் நட்பாக உரையாடி, பின்னர் அவர்களின் படங்களை மாற்றியமைத்து மீண்டும் அவர்களுக்கே அனுப்பி, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, மேலும் தனிப்பட்ட புகைப்படங்களை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
தனது அடையாளத்தை மறைக்க, டெலிகிராம் கணக்குகளில் உண்மையான பெயர் அல்லது படம் பயன்படுத்தாமல், அழைப்புகளும் வராதவாறு அமைப்புகளை மாற்றியமைத்திருந்தார்.
பயம் மற்றும் அவமானம் காரணமாக பல இளம் பெண்கள் புகார் அளிக்க முன்வராமல் இருப்பதாகவும், இதன் மூலம் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
.png)