கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர், 15 மணல் ஏற்றிய படகுகளுடன் நேற்று (06) மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
உப்பாறு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள ஆற்றுப்பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடைபெறுவதாக கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று மாலை விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஆற்றில் மணல் ஏற்றிய நிலையில் காணப்பட்ட 15 படகுகளையும், அதில் இருந்த இரண்டு சந்தேகநபர்களையும் கடற்படையினர் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட 15 மணல் படகுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் கிண்ணியா பொலிஸார், சந்தேகநபர்களை இன்று (07) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
.jpg)