செங்கலடி நகர அபிவிருத்தி தொடர்பான நிலாந்தனின் கோரிக்கையை ஏற்று ஆரம்ப கட்ட பணிகளை ஆரம்பித்த வீதி அபிவிருத்தி திணைக்களம்!


செங்கலடி நகரின் வீதி அபிவிருத்தி தொடர்பாக பிரதேசபை உறுப்பினர் நிலாந்தன் விடுத்த கோரிக்கைக்கு அமைய மாவட்ட வீதி அபிவிருத்தி திணைகளம் தங்களது ஆரம்பக்கட்ட பணிகளை இன்று ஆரம்பித்துள்ளது. 

செங்கலடி நகரின் அபிவிருத்தி மற்றும் செங்கலடி பிரதான சந்தியில் உள்ள வீதி சமிக்ஞை விளக்குகள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசல் அதனால் ஏற்படும் வீதி விபத்துகளை குறைக்கும் வகையில்  செங்கலடி சந்தை வீதிகள் மற்றும் தபால் கந்தோர் வீதி ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி மேற்படி வீதிகளை புனரமைத்து தருமாறு மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தனால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து பிரதேச சபை தவிசாளர் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை கருத்தில் கொண்டு இன்றைய தினம் குறித்த வீதிகள் தொடர்பாக ஆராய்வதற்காக மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்நேரடி களவிஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன் போது வீதிகளை பார்வையிட்ட மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்துயோகத்தர் தனது ஆரம்பக்கட்ட கள ஆய்வுகளை மேற்கொண்டதோடு. பிரதேச சபை உறுப்பினரின் கோரிக்கைகள் தொடர்பாக அவரிடம் கருத்துக்களையும் கேட்டறிந்தார். 

செங்கலடி சந்தை வீதி ஊடாக சென்று வலப்பக்கமாக திரும்பி ரமேஸ் புரம் முருகன் கோயில் சந்தியை அடைந்து வலப்பக்கமாக திரும்பி செல்லும் தபால் கந்தோர் வீதி ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதன் ஊடாக செங்கலடி பொதுச் சந்தையை அபிவிருத்தி செய்தல் மற்றும் செங்கலடி நகர வியாபார நடவடிக்கைகளை மேற்படி வீதிகளுக்கு விஸ்தரித்து செங்கலடி நகரை பெரிதாக்கும்  நோக்கோடு மேற்படி வீதிகளை அபிவிருத்தி செய்தி செய்வதற்கான கோரிக்கை பிரதேச சபை உறுப்பினருமான நிலாந்தன் ஊடாக வீதி அபிவிருத்தி திணைக்களம் பணிப்பாளருக்கு கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்  தனது ஆரம்பகட்ட பணிகளை வீதி அபிவிருத்தி திணைக்களம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.