பட்டிப்பளையில் ஆறு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!!

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் 2025ம் ஆண்டில் மண்முனை தென்மேற்கு, பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களில் 06 வீடுகள் 05.10.2025 ஆம் திகதி பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமாகிய கந்தசாமி பிரபு அவர்களினால் குறித்த வீடுகள் உத்தியோக பூர்வமாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலை தெற்கு, முனைக்காடு தெற்கு, பண்டாரியாவெளி, அம்பிளாந்துறை, அம்பிளாந்துறை மேற்கு (02) ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நிர்மானிக்கப்பட்ட வீடுகளே இதன் போது கையளிக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர் சி.சுதாகர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட பணிப்பாளர், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், NHDA தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பிரிவுக்கு பொறுப்பான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், கிராம பொதுமக்கள் என பலரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.