கிழக்கு பல்கலைக்கழகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 35வது நினைவேந்தல்


 

(செங்கலடி நிருபர் சுபஜன்)

1990 ஆம் ஆண்டு செட்டெம்பர் 5 ம் திகதி இடம்பெற்ற வன்செயலின் போது வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக்தில் தஞ்சமடைந்த நிலையில் சுமார் 158 இக்கு மேற்பட்ட பொதுமக்கள்  அரச படையினால் அழைத்துச் செல்லப்பட்டடு காணாமல்  ஆக்கப்பட்டிருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட 158 பேரது,  35வது ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு இன்று வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தின் முன் இடம்பெற்றது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் போனோரின் சங்கம் இணைந்து இந் நிகழ்வை  ஏற்பாடு செய்திருந்தது.

கிழக்கு பல்கலைக்கழத்தின் முன்பாக   ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன், படுகொலை செய்யப்பட்டோருக்கு நீதிகோரி கவனயீர்ப்பு ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதில் காணாமல் செய்யப்பட்டவர்களின் உறவுகள் ,மட்டக்களப்பு வலிந்து காணாமல் போனோரின் சங்கம், பல்கலைக்கழக மாணவர்கள் , மதகுருமார், சிவில் சமூகசெயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருத்தனர்.

அஞ்சலி நிகழ்வை அடுத்து, உயிர்நீத்தவர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு செட்டெம்பர் 5 ம் திகதி இடம்பெற்ற வன்செயலின் போது வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக்தில் தஞ்சமடைந்துள்ள நிலையில் சுமார் 158 இக்கு மேற்பட்ட பொதுமக்கள்  அரச படையினால் அழைத்துச் செல்லப்பட்டடு காணாமல்  ஆக்கப்பட்டிருந்தனர்.