பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு வாக்கு மூலம் வழங்குமாறு, சுயாதீன ஊடகவியலாளர் க. குமணனுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.
எதிர்வரும் 17ஆம் திகதி காலை 10 மணிக்கு முல்லைத்தீவு அளம்பில் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து , பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு அழைப்பாணையில் , அறிவுறுத்தப்பட்டுள்ளது.