பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளாகி மிகுந்த போராட்டங்களுக்கு மத்தியில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நாளை 12.08.2025 சிறப்பாக இடம்பெறவுள்ளது.
நாளை காலை 7 மணிக்கு விசேட அபிசேகம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து விசேட பூசை வழிபாடுகள், அன்னதானம் என்பன இடம்பெற்று மாலைவேளையில் கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு அன்று இரவு முழுவதும் பாரம்பரிய பொங்கல் நிகழ்வு இடம்பெறும்.
எனவே பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இடம்பெறும் இந்த பொங்கல் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.