யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு அருகில் உள்ள குளத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை ஆணொருவரது சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
அவர் வெள்ளை, சிவப்பு மற்றும் கறுப்பு ஆகிய வர்ணங்களிலான பெட்டி போட்ட சட்டையை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அவரது துவிச்சக்கர வண்டி குளத்திற்கு வெளியே காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சடலத்தை அடையாளம் காண்பதற்கு பொதுமக்கிடம் உதவி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
