கிண்ணியா போலீஸ் பிரிவுக்குட்பட்ட மகாவெளி கங்கையை அண்டிய காட்டுப்பகுதியில் சட்ட விரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட நான்கு வாகனங்களையும் 6 பேரையும் கிண்ணியா போலீசார் கைது செய்துள்ளனர்.
இவற்றில் இரண்டு கனராக டிப்பர் இயந்திரமும் இரண்டு உழவு எந்திரமும் ஆகும்.
சட்ட விரோத மண் அகழ்வு நடைபெறும் இடத்தை சுற்றி வலைத்த கிண்ணியா போலீசார் கிண்ணியா மகாவலி கங்கை பிரதேசத்தில் மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கிண்ணியா போலீஸ் பொறுப்பு அதிகாரி டபிள்யூ ஜி எச் பெனான்டோ தெரிவித்தார்.
பகுதியில் அடிக்கடி மண் அகழ்வு சட்டவிரோதமாக நடைபெறுவதாகவும் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் போலீஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.