நல்லூரான் தரிசனம் ஆரம்பம்






வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (29) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

காலை 08.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றது.

பிள்ளையார், முருகப்பெருமான், வள்ளி – தெய்வானை மூஷிகம், மயூரம், அன்னம் ஆகியன மூன்று தங்க வாகனங்களில் உள்வீதி உலா வந்தார்.

மகோற்சவம், தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.

மகோற்சவத்தில், மஞ்சத் திருவிழா எதிர்வரும் 07ஆம் திகதியும், மாம்பழத் திருவிழா எதிர்வரும் 19ஆம் திகதியும், சப்பறத் திருவிழா எதிர்வரும் 20ஆம் திகதியும், தேர்த் திருவிழா 21ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.

தீர்த்தத் திருவிழா 22ஆம் திகதி காலை இடம்பெற்று, மாலை கொடியிறக்கத்துடன் மகோற்சவம் நிறைவுபெறும்.