பாம்பை கடித்த ஒரு வயது குழந்தை – பாம்பு சாக, குழந்தை உயிர் தப்பியது!




குழந்தையொன்று பாம்பை கடித்த நிலையில் குறித்த பாம்பு உயிரிழந்துள்ளது.

இந்த வியப்பூட்டும் சம்பவம் பிகார் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒரு வயதுடைய கோவிந்த் என்ற குழந்தையே இவ்வாறு பாம்பை கடித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை  நடைபெற்ற இந்த 'பாம்பு கடி' சம்பவத்திற்குப் பிறகு, அனைவரின் கவனத்தையும் அந்தக் குழந்தை ஈர்த்துள்ளது. பாம்பைக் கடித்த குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளது.

அதில் பாம்பு உயிரிழந்துவிட, குழந்தை எவ்வித பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக உள்ளது.

இந்த சம்பவம் குறித்து செய்திகள் வெளியானதிலிருந்து, கோவிந்தை பார்க்க மக்கள் திரண்டு வருகின்றனர்.