செம்மணி மனித புதைகுழியில் அரவணைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு!



செம்மணி மனித புதைகுழி அகழ்வின் போது பெரிய எலும்பு கூடொன்றுடன் சிறிய குழந்தையின் எலும்பு கூடொன்று அரவணைக்கப்பட்ட விதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நடைபெற்றுவரும் செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டத்தின் 25 ஆவது நாள் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டபோது குறித்த எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன .