வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலைக்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
12 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு, மாவட்டங்களில் சில இடங்களில் 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று திணைக்களம் கூறுகிறது.