கொஸ்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொஸ்கொட சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.