Batticaloa Expo 2025 கண்காட்சி




மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணத்துறை, தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறைகளை வலுப்படுத்தும் நோக்கில்  Batticaloa Expo 2025  நிகழ்வானது மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது தடவையாக இடம்பெறவுள்ள  Batticaloa Expo 2025  கண்காட்சியானது எதிர்வரும் 17 முதல் 20 ஆம் திகதி வரையான நான்கு நாட்கள் சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இதில் அனைவரும்  கலந்து கொண்டு பயன்பெறுமாறு மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா அழைப்பு விடுத்துள்ளார்.