கணவருடன் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்ததால், கோபத்தில் தனது கணவனை கொலை செய்து உடலை வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி புதைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுளளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கணவன், மனைவிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் இவ்வாறு கொலை செய்துள்ளதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.