மட்டக்களப்பு போரதீவுப்பற்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதேச கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் "உயிர் தந்த உப்பு கஞ்சி" என்னும் தொனிப்பொருளில் நடைபெற்றது.
இலங்கை உள்நாட்டு போரில் இறந்த தமிழ் அப்பாவி பொது மக்களை நினைவு கூரும் முகமாக மே18 எனும் இந் நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேசக்கிளை உபதலைவரும் பிரதேசசபை உறுப்பினருமான ம.கோபிநாத் தலைமையில் போரதீவுப்பற்று பிரதேச சபை முன்றலில் இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் அவலம் வலி சுமந்த மற்றும் அந்த கொடிய யுத்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளுக்காக நினைவஞ்சலி செலுத்தப்பட்டதுடன் முகாம்களில் அடைக்கப்பட்ட யுத்தத்தின் இறுதி நாட்களில் பொதுமக்கள் தமது உயிர் காக்க அருந்திய உப்புக்கஞ்சி ஞாபகார்த்தமாக உப்புக்கஞ்சி காய்ச்சி நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பகிர்ந்தளித்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட போரதீவுப்பற்று உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.