உலகின் முதல் தமிழ் பேராசிரியருக்கு மட்டக்களப்பில் கற்சிலை –விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

உலகின் முதல்; தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக்கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் கருகல் சிலை முதன்முறையாக மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதன் திறப்பு விழா எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ளதாக சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையினர் தெரிவித்தனர்.மட்டக்களப்பு ஈஸ்ற் லகூன் ஹோட்டலில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையின் ஊடக சந்திப்பு இன்று நடைபெற்றது. சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையின் தலைவர் க.பாஸ்கரன்,செயலாளர் இ.ஜெயராஜா,சிலை அமைக்கும் பணியை முன்னெடுத்துள்ள தேசபந்து மு.செல்வராஜா ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையின் தலைவர் க.பாஸ்கரன்,
சுவாமி விபுலானந்தரின் துறவற நூற்றாண்டினை முன்னிட்டு உலகமெங்கும் சுவாமி விபுலானந்தரின் துறவற வாழ்க்கை மற்றும் அவரின் பணி குறித்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
இந்த வகையில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையானது தனது பங்களிப்பாக மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் சுவாமி; விபுலானந்தரின் திருவுருவ கற்சிலையொன்றை நிறுவும் பணியை முன்னெடுத்து அதன் திறப்பு நிகழ்வு எதிர்வரும் 17-05-2025அன்று பிற்பகல் 4.30மணியளவில் திறப்பு விழா செய்யப்படவுள்ளது.ஊர்வலம் நடைபெற்று சிலை திறப்பு விழாவுடன் மேடை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.இந்த நிகழ்வில் கொழும்பு இராமகிருஸ்ணமிஷன் சுவாமி மற்றும் மட்;டக்களப்பு இராமகிருஸ்ணமிஷன் சுவாமி கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த சிலையினை அமைப்பதற்காக பல்வேறு கொடையாளிகள் உதவியுள்ளனர்.33பேர் தலா ஐந்து இலட்சம் வீதம் வழங்கியுள்ளனர்.அவர்களை கௌரவிக்கும் வகையான நிகழ்வும் நடைபெறும்.
கடந்த ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு நிகழ்வில் இலங்கையிலிருந்து தேசிபந்து மு.செல்வராஜா கலந்துகொண்டிருந்தபோது பல்வேறு தரப்பினரும் கல்சிலையொன்றை மட்டக்களப்பில் ஏன் அமைக்கமுடியாது என்று கேட்டிருந்தனர்.அங்கு உருவான அந்த ஏக்கம் இங்கு சிலை அமைப்பதற்கான தீர்மானத்தினை எடுக்கவைத்தது.
சிலை திறக்கப்பட்டு மறுதினம் 18ஆம் திகதி சர்வதேச ரீதியான ஆய்வரங்கம் ஒன்றினையும் ஏற்பாடுசெய்துள்ளோம்.சர்வதேச ரீதியிலிருந்து பல அறிஞர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில் விபுலாந்தர் தொடர்பான நூலும் வெளியிடப்படவுள்ளது.18ஆம் திகத காலை 8.30மணி தொடக்கம் பிற்பகல் 1.00மணி வரையில் நடைபெறும்எ னவும் தெரிவிக்கப்பட்டது.