மட்டக்களப்பு மாவட்டத்தில் வெயில் மற்றும் மழையுடனான காலநிலைகள் மாறிமாறிவரும் சீரற்ற காலநிலை காரணமாக பரவிவரும் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி சுகாதாரப் பணிமனைக்கு உட்பட்ட பெரிய கல்லாறு பகுதியில் டெங்கு நோயின் தாக்கம் அதிகளவில் காணப்படுவதினால் அதனை கட்டுப்படுத்தும் வகையிலான மாபெரும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
பெரிய கல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் கிராம மக்களின் உதவியுடன் இந்த சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வானது கல்லாறு மத்திய விளையாட்டைக் கழகத்தின் தலைவர் அ.அகிலன் தலைமையில் இடம் பெற்றது
இந்த சிரமதான பணிகளில் களுவாஞ்சிகுடி சுகாதார பிராந்திய பணிமனையின் வைத்திய அதிகாரி டாக்டர் அ.உதயசுரியன் அவர்களிண் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த சிரமதான பணிகளில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,பொதுமக்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த சிரமதான பணியின் போது டெங்கு நுளம்பு பரவகூடிய இடங்களை அடையாளம் கண்டு அதில் அதி கூடிய கவனம் எடுக்கப்பட்டதுடன் உக்காத பொருட்கள் மற்றும் டெங்கு பரவக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் சிரட்டைகள் வெற்று கோப்பைகள் என்பவற்றை கிராம்ம் பூராகவும் வீடு வீடாக சென்று ஒழுங்கு செய்யபட்ட வாகனங்களில் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுத.
இந்த சிரமதான நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதவர்கள் மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள் பிரதேச சபையின் ஊழியர்கள் கிராம மக்கள் மகளிர் சங்கங்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.