இவர் ஒரு குற்றவாளி, ஆனால் இவர் அகம்பாவத்துடன் நீதிமன்றத்திற்குள் நுழைந்தார், இவர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட பாதள உலகத்தினர் போன்றவர் என நீதிமன்றத்தில் தேசபந்து தென்னக்கோனிற்கு எதிராக கடும் சீற்றத்தை வெளிப்படுத்தினார் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்.
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்குவதை கடுமையாக எதிர்த்துள்ள சட்டமா அதிபர் திணைக்களம், அதற்கான வாதங்களையும் நேற்று நீதிமன்றில் முன்வைத்தது.
வெலிகமவில் 2023ஆம் ஆண்டு விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேடப்பட்டு வந்த தென்னக்கோன், 2025 மார்ச் 19 அன்று மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.இதனையடுத்து நீதிமன்றம் அவரை இன்றுவரை( மார்ச் 20) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.இந்தநிலையில், குறித்த உத்தரவுக்கு முன்னதாக, நீதிமன்றில் முன்னிலையான சட்டமா அதிபரின் பிரதிநிதியான, மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ், தலைமறைவாகி சரணமடைந்துள்ள தென்னக்கோனுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.சந்தேக நபர், ஒரு ஆடம்பர பென்ஸ் சிற்றூந்தில், நீதிமன்ற வளாகத்திற்குள் அமர்ந்திருப்பதாக தமக்கு தகவல் கிடைத்தது.ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி
அவர் மாகந்துரே மதுஷ் மற்றும் ஹரக் கட்டா போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளிலிருந்து வேறுபட்டவர் அல்ல.
மேலும், அவர் ஒரு திறமையான நடிகர் - அவருக்கு வேறு வழியில்லாமல் இருக்கும்போது மட்டுமே அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இந்தத் தகவலைப் பெற்ற பின்னரே, தாம் இந்த நீதிமன்றத்தில் முன்னிலையாக முடிவு செய்ததாக திலீப பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர், ஒரு இரகசிய பூனை போல நீதிமன்றத்திற்குள் நுழைந்துள்ளார், சட்டத்துறைக்கு அறிவிக்காமல் பிணை பெற முடியும் என்று நம்புகிறார். தாம் நீதிமன்றத்திற்கு வந்தபோது கூட, அவர் ஒரு இருக்கையில் முறையாக உடையணிந்து அமர்ந்திருந்தார்.
குற்றவாளியான அவர் எவ்வாறு இருக்கையில் அமர்ந்திருக்க முடியும். அவர் தடுப்பில் அல்லவா இருக்க வேண்டும் என்று திலீப பீரிஸ் வாதிட்டுள்ளார்.
அவர் ஒரு குற்றவாளி. ஒரு குற்றவாளி ஆணவத்துடன் நீதிமன்றத்திற்குள் நடந்து கொள்ளக்கூடாது. அவர் தனது தொலைபேசியை துண்டித்து விட்டு சுமார் 20 நாட்கள் நீதிமன்றத்தைத் தவிர்த்து வந்தார்.