வாழைச்சேனை- பேத்தாளையை சேர்ந்த டிலோஜன் 33 வயதுடைய ஒருவரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இரண்டு மரக்கறி வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்டிருந்த முரண்பாடே கத்திக்குத்து;தாக்குதலுக்கு காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பி மீது சிலர் தாக்குதல் முன்னெடுக்க முயற்சிப்பதைக்கண்டு அதனை தடுக்கச்சென்ற அண்ணனே இந்த தாக்குலில் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.