மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் இல்ல உடல்திறனாய்வுபோட்டி - கோல்டம் இல்லம் சம்பியன்


இலங்கையில் மிக பழமையான பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் இல்ல உடல் திறனாய்வுப்போட்டி நேற்று மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.மட்டக்களப்பு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் இல்ல உடல் திறனாய்வுப்போட்டியானது மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் கே.பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி என்.மகேந்திரகுமார்,தேசிய கடெற் பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட கட்டளை அதிகாரி மேஜர் டி.ஆர்.என்.கப்புறுகே,சர்வதேச சிறுவர் அனர்த்த பாதுகாப்பு நிறுவகத்தின் தேசிய பணிப்பாளர் வி.தர்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அதிதிகள் மாணவர்களின் பேன்ட்வாத்தியம்,சாரணர்களின் வரவேற்பு மற்றும் கடெற் பிரிவின் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன் தேசியக்கொடி மற்றும் பாடசாலை,இல்லங்களின் கொடிகள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அணி வகுப்பு மரியாதை,மாணவர்கள் உடற்பயிற்சி கண்காட்சி மற்றும் பேண்ட் வாத்திய அணியின் விசேட வாசிப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.
அத்துடன் சாதனைகள் நிலை நாட்டிய மாணவர்கள் பரிசுகள் வெற்றிக்கிண்ணங்கள்,சான்றிதழ்கள்,பதக்கங்கள் வழங்கிகௌரவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் இவ் விளையாட்டு போட்டியின் முடிவில் கோல்டம் இல்லம் 348 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், காட்மன் இல்லம் 312 புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தையும்,சோமநாதர் இல்லம் 277 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும்,ஓல்ட் இல்லம் 258 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தையும் பெற்றுக் கொண்டன.