புதர்க்காட்டுப்பகுதியில் ஆண் சிசு ஒன்றின் சடலம்


மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை - தேவபுரம் பகுதியிலுள்ள புதர்க்காட்டுப்பகுதியில் காணப்பட்ட ஆண் சிசு ஒன்றின் சடலம்  (15.03.2025 ) மீட்கப்பட்டதாக சந்திவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.முறக்கொட்டாஞ்சேனை தேவபுரம் பழைய  அரசாங்க அரிசி ஆலைக்கு அருகாமையில் இச்சடலம் காணப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
காலைக்கடன் கழிப்பதற்காக அந்த காட்டுப்பகுதிக்குச் சென்ற நபர் ஒருவர் இச்சடலத்தை அவதானித்து அக்கிராம  சேவை அதிகாரி மூலமாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த சிசு பெறப்பட்டு கொலை செய்யப்பட்டு காட்டில் போடப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. எனினும் சந்தேக நபர்கள் எவரும் உடனடியாக கைதுசெய்யப்படவில்லை.  

சந்திவெளி பொலிஸார் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.