எதிர்வரும் 09.03.2025 முதல் 14.03.2025 ம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில பகுதிகளில் காலபோக நெல், சிறுதானியம் மற்றும் வெங்காயம், புகையிலை போன்ற பணப் பயிர்களின் அறுவடைக் காலமாக இது இருப்பதன் காரணமாக மேற் குறிப்பிட்ட நாட்களைக் கருத்தில் கொண்டு தமது அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மார்ச் மாத மழை வீழ்ச்சியானது அயன இடை ஒருங்கல் வலய செயற்பாட்டினால் தூண்டப்பட்ட மேற்காவுகை ( வெப்பச்சலனம்) செயன்முறை மூலம் கிடைப்பதனால் பரவலான இடி மின்னல் நிகழ்வுகளோடு இணைந்ததாகவே இம்மழை கிடைக்கும். எனவே மக்கள் இடி மின்னல் நிகழ்வுகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.
முன்னரே குறிப்பிட்டபடி இம்முறை மார்ச் மாதத்தில் கணிசமான அளவு மழை கிடைக்கும் வாய்ப்புள்ளமை மகிழ்ச்சிக்குரியது.
-நாகமுத்து பிரதீபராஜா-