அரச உத்தியோகத்தர்களுக்கான மென் திறன் அபிவிருத்தி பயிற்சி-2025


அரச உத்தியோகத்தர்களுக்கான மென் திறன் அபிவிருத்தி தொடர்பான பயிற்சியானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டலில் இன்று(21.03.2025) பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் வளவாளராக மண்முனைப் பற்று பிரதேச செயலக அபிவிருத்தி உதவியாளர் திரு.செல்வநாயகம் சிவாஸ்கரன் அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.
இந் நிகழ்வு காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மிகவும் வினைத்திறனான செயற்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன.