(ஆர்.நிரோசன்)
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/ குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி நேற்று (28) வெள்ளிக்கிழமை குடியிருப்பு சக்தி விளையாட்டுக்கழக பொது மைதானத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் எஸ். டி. முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எஸ். நவநீதன் அவர்களும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாணவிளையாட்டு திணைக்களப்பணிப்பாளர் எஸ். பிரகாஷ் அவர்களும் , சிறப்பு அதிதிகளாக
மட்டக்களப்பு வலயக்கல்வி விளையாட்டிற்கான
உதவி உடற்கல்விப் பணிப்பாளர்
வி.லவக்குமார் மற்றும் ஏறாவூர்பற்று கோட்டக்கல்வி அதிகாரி டி. ராஜமோகன்
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கொட்டும் மழையிலும் ஒலிம்பிக் தீபம் ஏற்றல், போட்டிகளில் வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
திருமகள் இல்லம் மொத்தமாக 739 புள்ளிகளைப் பெற்று முதலாவது இடத்தை தன் வசப்படுத்தியதுடன் மலைமகள் இல்லம் 674 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், கலைமகள் 453 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தினையும் தன்வசப்படுத்தியதோடு
கொட்டும் மழையில் இடம்பெற்ற
இப்போட்டிகளில் இடம் பெற்ற அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது. இதன் போது பாடசாலையின் ஆசிரியர்கள் , பாடசாலையின் பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கொண்டு சிறப்பித்தனர்.