வாழைச்சேனை பகுதியில் 04 கஜமுத்துகளுடன் இருவர் கைது


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பகுதியில் நேற்று நான்கு கஜமுத்துகளுடன் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.வாழைச்சேனை காவத்தைமுனையில் உள்ள விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மூதூர்,ஆலிம்நகர் பகுதியை சேர்ந்த முகம்மது புஹாரி,முகம்மது சியாம் ஆகிய இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது நான்கு கஜமுத்துகள் மீட்கப்பட்டதுடன் கைதுசெய்யப்பட்ட நபர்களும் கஜமுத்துகளும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.