மறைந்த எமது கட்சியின் முன்னாள் தலைவர் மாவை.சேனாதிராஜா அவர்களுடைய இறுதிக்கிரியைகள் நேரத்திலே நிகழ்ந்த சில அசம்பாவிதங்கள் சம்பந்தமாக கட்சியினுடைய மத்திய குழு உறுப்பினர்கள் 18பேர் சம்பந்தமாக படங்களை பிரசுரித்து பதாகைகள் கட்டப்பட்டு அவருடைய மரணத்திற்கு இவர்கள் தான காரணமென்று விசமத்தனமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன இதனை செய்தவர்க்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இலங்கைத் தமிழரக் கட்சியினுடைய மத்திய செயற்குழுக்கூட்டம் இன்று களுவாஞ்சிகுடியிலே கூட்டப்பட்டு பல முக்கிய விடயங்கள் பற்றி பேசியிருக்கின்றோம். விN~டமாக உள்ளுராட்சி சபைத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதே இடத்திலே நாங்கள் ஒரு வருடத்திற்கு முன்னர் உத்தேசமாக நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளுக்கு ஒரு பரிந்துரையை செய்திருந்தோம். இந்தத் தேர்தல் முறையிலே தனித்தனியாக போட்டியிட்டுவிட்டு பின்னர் ஒன்றாக இணைந்து ஆட்சியமைப்பதற்கு இந்தத் தேர்தல் முறை உபயோகமாக இருக்கும் என்ற கருத்து சொல்லப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக இந்தக் கட்சித் தலைவர்களோடும் ஒருசில பேச்சுவார்த்தைகள நடந்திருக்கின்றது. அப்படியான ஒரு புரிந்துணர்வு தமிழ்த்தேசிய கட்சிகளோடு ஏற்படுத்த முடியுமா என்பது குறித்து ஆராய்வதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம். அதாவது தனித்து போட்டியிட்டாலும் தேர்தலுக்கு முன்னராகவே நாங்கள் சேர்ந்து ஆட்சியமைப்பதற்கான ஒரு புரிந்துணர்வாகும்
எல்லா மாவட்டங்களிலும் நிலைமை ஒரேமாதிரியானதாக இல்லை. வெவ்வேறு மாவட்டங்களிலே வெவ்வேறு சபைகளிலே இந்த நிலைமை மாறக்கூடும். அதற்கேற்றாற்போல அந்தந்த மாவட்டங்களிலே சற்று வித்தியதசமான அணுகுமுறைகளையும் கையாள முடியுமென்றும் நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம். அது சம்பந்தமாக தலைவருக்கும் பொதுச்செயலாளருக்கும் கட்சி கூறியிருக்கின்றது மற்றைய தமிழ்த்தேசியக் கட்சித் தலைவர்களோடும் பேச்சுவார்த்தைகளை நடத்தும்படியாக. அது சம்பந்தமாக பின்னர் நாங்கள் கூடவேண்டியிருந்தால் அரசியற்குழுவும் கூடி நிறைவான தீர்மானங்களை எடுக்கலாம் என்று நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்.
அடுத்ததாக ஒழுக்காற்று நடவடிக்கைகள் சம்பந்தமான சில விடயங்கள் பேசப்பட்டன. பலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றது. சிலர் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து விலக்கப்பட்டிருக்கின்றார்கள். அனைவரும் அப்படியான விலக்கப்படுதலில் உள்வாங்கப்படவில்லை. மூன்று மாவட்டங்களில் இருந்துதான் அந்தப் பட்டியல் பொதுச்செயலாளரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மற்றைய மாவட்டங்களிலும் கட்சிக்கு எதிராக வேறு அணிகளில் போட்டியிட்டவர்களுடைய பெயர்கள் நிர்வாகச் செயலாளர் தானாக சிலரை அடையாளங்கண்டிருக்கின்றார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அந்தப் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதில் மேலதிகமாக யாராவது இருந்தால் அதுபற்றி தெரிவித்தால் அவர்களும் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். கட்சிக்கு எதிராகவும் கட்சியின் முடிவுகளுக்கு எதிராகவும் பிரசாரம் செய்தவர்கள் சம்பந்தமான ஒழுக்காற்று நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சிலருக்கு விளக்கங்கோரி கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் ஒரு ஒக்காற்றுக் குழுவுக்கு முன்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டியவை.
தற்போதிருக்கின்ற ஒழுக்காற்றுக் குழுவிலே திரு.சிறிநேசனும் திரு.சரவணபவனும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றார்கள். திரு.குருகுலராஜா தலைவராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். விளக்கக்கடிதங்கள் வருகின்றபோது அவர்களுக்கு எதிராக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளும் அவர்கள் கொடுக்கின் விளக்கங்களும் ஒக்காற்றுக் குழுவுக்கு பாரப்படுத்தப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் எமது கட்சித் தலைவருக்கு கொடுத்த கடிதம் இங்கே வாசித்துக் காட்டப்பட்டது. இது சம்பந்தமாக கடந்த மத்திய செயற்குழுவிலேயே நாங்கள் ஏழுபேர் கொண்ட குழுவை நியமித்திருந்தோம். இன்று அந்தக் குழுவிலே ஒரு சிறு மாற்றம் செய்யப்பட்டது. திரு. சாணக்கியன் அதிலிருந்து விலகி திரு. சிறிநேசனுடைய பெயரை அவர் முன்மொழிந்திருந்தார்.
இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன என்பது எங்களுக்குத் தெரியும், நாங்கள் அதனை முன்வைப்போம் என்று பிரசாரம் செய்தது. தற்போது தங்களுக்கு மக்கள் ஆணை இருப்பதாகச் சொல்கின்றார்கள். நாங்களும் அதனை ஏற்றுக்கொள்கின்றோம். வடக்கிலும் தமிழ் மக்களுடைய ஆணை இருப்பதாகச் சொல்கின்றார்கள். தீர்வை நாங்கள் முன்வைப்போம் என்று சொல்கின்றீர்கள். ஆனால் அண்மைக்காலமாக அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் விN~டமாக அமைச்சரவைப் பேச்சாளர் டொக்டர்.நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்குச் சொல்லியிருக்கின்றார் பொருளாதாரப் பிரச்சினைதான் முக்கியமானது, அதனை நாங்கள் முதலில் கவனிப்போம், புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் விடயத்தை பின்னர் பார்த்துக்கொள்வோம் என்று கூறியிருக்கின்றார். வேறு சிலர் மூன்று வருடங்களுக்குப் பின்னர் அதைப்பற்றி பேசுவோம் என்று கூறியிருக்கின்றனர்.
இந்த நாட்டினுடைய பிரதான பிரச்சினை தமிழ்த் தேசியப் பிரச்சினையாகும். வேறு எந்தவொரு பிரச்சினைக்காகவும் இந்த நாட்டிலே முப்பது வருடகாலம் யுத்தம் நடைபெறவில்லை. பொருளாதாரப் பிரச்சினைக்கும் அடிவழியாக இருப்பது அந்த யுத்தமாகும். அதனை விடுத்து பொருளாதாரப் பிரச்சினையை முதலில் நாங்கள் பார்ப்போம் என்று கூறுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கத்திடம் நாங்கள் வலிந்து கூறுவது நீங்கள் கூறிய அரசியற்தீர்வை காலந்தாழ்த்தாது முதலில் முன்வையுங்கள்.தமிழருடைய பிரதான கட்சியான எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது சகலருக்கும் தெரியும். இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அரசியற்தீர்வு எப்படியானது, என்ன அடிப்படையிலானது என்பதை நாங்கள் கூறிவந்திருக்கின்றோம், பலவரைபுகள் செய்திருக்கின்றோம், பல பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றோம். ஆகவே நாங்கள் ஒரு நிலைப்பாட்டையும் முன்வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதனை திர்ப்பதற்கு எங்களுக்குத் தெரியும் என்று சொல்கின்ற அரசாங்கம் காலந்தாழ்த்தாது அரசியற்தீர்வு சம்பந்தமான புதியஅரசியலமைப்பு வரைபை முன்வைக்க வேண்டும்.
அண்மையில் மறைந்த எமது கட்சியின் முன்னாள் தலைவர் மாவை.சேனாதிராஜா அவர்களுடைய இறுதிக்கிரியைகள் நேரத்திலே நிகழ்ந்த சில அசம்பாவிதங்கள் சம்பந்தமாக கட்சியினுடைய மத்திய குழு உறுப்பினர்கள் 18பேர் சம்பந்தமாக படங்களை பிரசுரித்து பதாகைகள் கட்டப்பட்டு அவருடைய மரணத்திற்கு இவர்கள் தான காரணமென்று விசமத்தனமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. தலைவரும் பொதுச்செயலாளரும் அவரை சென்று பார்வையிட்டதனால்தான் அவர் மரணமடைந்தார் என்றெல்லாம் போலியான செய்திகள் பரப்பப்பட்டிருந்தன.
இது சம்பந்தமாக கட்சித் தலைவர் பொலிஸிடம் முறைப்பாடொன்றை செய்திருக்கின்றார். இணையவழி மூலம் செய்யப்படுகின்ற பிரசாரத்துக்கு எதிராகவும் பதாதைகள் கட்டப்பட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் கட்சித் தலைவர் என்ற ரீதியிலே அவர் பொலிஸ் முறைப்பாட்டை செய்திருக்கின்றார்.