மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தின் 150 ஆவது பாடசாலை தினத்தினை சிறப்பித்து 2002 O/L BATCH பழையமாணவர்களால் 2024(2025) க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்கான கணித பாட கருத்தரங்கு 23.02.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியளவில் வித்தியாலய மண்டபத்தில் அதிபர். அ.குலேந்திரராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. வளவாளராக திரு.A.R.ஜதுர்சன் ஆசிரியர் கலந்து கொண்டார்.
இக்கருத்தரங்குக்கான அனுசரணையினை பாடசாலையின் பழைய மாணவரான திரு.ரா.லோகிதராஜ் அவர்கள் வழங்கியிருந்தார்.