இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைத்தலைவர் கே. விமலநாதன் தலைமையிலான குழுவினர் பருவ பெயர்ச்சி மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு நிவாரண பொதிகளை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் (17) இடம் பெற்றது.
மாவட்டத்தில் வெள்ளத்தினால் அதிகளவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிராம சேவையாளரின் பரிந்துரைக்கு அமைவாக இவ் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்காகும்.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினரினால் நிவாரண பொதிகள் வழங்கப்படவுள்ளது.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஷ், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி திட்ட மிடல் பணிப்பாளர், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளை நிறைவேற்று உத்தியோகத்தர் ஆர்.ராஜ்குமார், அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத், அனர்த்த நிவாரண சேவை அதிகாரி, கிராம சேவை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.