கிழக்கு மாகாணங்களில் வானிலை நாளை முதல் படிப்படியாக குறைவடையும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் நிலவி வந்த மழையுடனான வானிலை நாளை முதல் படிப்படியாக குறைவடையும்.

எதிர்வரும் 22.01.2025 முதல் 27.01.2025 வரை மழையற்ற வானிலை நிலவும். இருப்பினும்
1. முல்லைத்தீவு மாவட்டம் - 21 மற்றும் 22 ம் திகதிகளில் சராசரியாக 10 மி.மீ. அளவும்
2. கிளிநொச்சி மாவட்டம் - 22ம் திகதி சராசரியாக 10 மி.மீ. அளவும்
3. மன்னார் மாவட்டம் - 21 ம் திகதி சராசரியாக 10 மி.மீ அளவும்
4. வவுனியா மாவட்டம் - 21 ம் திகதி சராசரியாக 10 மி.மீ. அளவும்
5. யாழ்ப்பாண மாவட்டம் - 22ம் திகதி சராசரியாக 05 மி.மீ. அளவும்
6. திருகோணமலை மாவட்டம் - 23ம் திகதி சராசரியாக 08 மி.மீ. அளவும்
7. மட்டக்களப்பு மாவட்டம் - 21 மற்றும் 22ம் திகதி சராசரியாக 08 மி.மீ. அளவும்
08. அம்பாறை மாவட்டம் - 21 மற்றும் 22 ம் திகதிகளில் சராசரியாக 10 மி.மீ. அளவும் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இதனை விட இந்த காலப்பகுதியில் மேலே குறிப்பிடாத ஒரு சில நாட்களுக்கு சில பகுதிகளுக்கு சிறிய அளவில் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இக்காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயிகள் தங்கள் அறுவடை செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். ஆயினும் மிதமான அளவிலான மழையை எதிர்கொள்வதற்கான ஒரு சில ஏற்பாடுகளுடன்( கூடார தாள்(தறப்பாள் வசதிகளுடன்)) மேற்கொள்வது சிறந்தது.
அதேவேளை எதிர்வரும் 22.01.2025 முதல் 28.01.2025 வரை குளிரான வானிலை நிலவும்.
அத்துடன் எதிர்வரும் 24.01.2025 வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் 28.01.2025 முதல் 03.02.2025 வரை மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
- நாகமுத்து பிரதீபராஜா -