கல்முனை இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் சொகுசு வண்டி வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்கே அருகே நேற்று இரவு 11.30 மணியளவில் திடீரென குறுக்கறுத்த ஆட்டோ ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்துள்ளனர்.
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பயணித்த ஆட்டோ ஒன்றே இவ்வாறு மோதி விபத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
இதன்போது படுகாயமுற்ற ஆட்டோ சாரதி உட்பட காயமுற்ற 4 மாணவர்கள் மாவடிவேம்பு செங்கலடி மற்றும் ஏறாவூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏறாவூரில் அனுமதிக்கப்பட்ட 2 மாணவர்கள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
விபத்து நடைபெற்றது தொடர்பான சீசீரிவி காட்சிகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.