மத்திய வங்காள விரிகுடாவில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது எதிர்வரும் 07.11.2024 வியாழக்கிழமை தாழமுக்கமாக மாற்றம் பெறும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் 07.11.2024 முதல் 12.11.2024 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மாதிரிகளின் தற்போதைய நிலையின் படி இத் தாழமுக்கம் மேற்காக நகர்ந்து எதிர்வரும் 10.11.2024 அளவில் வடக்கு மாகாணத்திற்கு அண்மித்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-நாகமுத்து பிரதீபராஜா-