இடியுடன் கூடிய மழை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை

 

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (4) மாலை அல்லது இரவு நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதுமட்டுமின்றி, தென் மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை நேரத்தில் ஓரளவு மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று, மின்னல் தாக்கங்களை மையமாக கொண்ட இயற்கை மற்றும் வானிலை அவசரமான நிலைகளால் ஏற்படும் அபாயங்களைத் தடுக்க, மக்கள் அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு பொதுவாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.