மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளியில் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பம் ஒன்றிற்கு வீட்டுடன் கூடிய கடை தொகுதி அமைத்து திறந்துவைக்கப்பட்டது.கணவனை இழந்த குடும்பத்தினை தலைமை தாங்கும் மிகவும் கஸ்ட நிலையில் வாழும் பெண்னொருவருக்கே இந்த வீட்டுடன் கூடிய கடை அமைத்து வழங்கப்பட்டுள்ளது.
சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தாய்ச்சங்க பொருளாளர் க.துரைநாயகம் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு இந்த வீட்டுடன் கூடிய கடை அமைத்து வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு இன்று பகல் சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தாய்ச்சங்க பொருளாளர் க.துரைநாயகம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் துரைநாயகம் அவர்களின் பாரியார் நித்தி துறைநாயகம் மற்றும் சுவிஸ் உதயம் அமைப்பின் நிர்வாக சபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது வீட்டுடன் கூடிய கடை திறந்துவைக்கப்பட்டதுடன் வியாபார நடவடிக்கைகளும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.