களுத்துறை கதிர்வேலாயுத சுவாமிக்கு நாளை ஆரம்பம்.

 



இலங்கையின் மேல் மாகாணம் களுத்துறை மாவட்டத்தின் தலைநகரில் பன்னெடும் காலமாக கோவில் கொண்டு அருள்பாலித்துக்கொண்டிருக்கும்  வேலாபுரம் ஸ்ரீ  கதிர்வேலாயுத சுவாமி கோவிலின் மூலவர் முருகனுக்கு வருடாந்த அலங்காரப்பெரு விழா நாளை செவ்வாய்க்கிழமை (18.06.2024) அன்று ஆரம்பம்.

 மஹா கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகும் அலங்கார உற்சவப் பெருவிழா 19.06.2024 புதன்கிழமை கொடியேற்றம் இடம்பெற்று 23.06.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெறும் வைரவர் பூசையுடன் நிறைவு பெறவுள்ளது.

இவ் வருட உற்சவத்தில் 

20.06.2024 அன்று  பாற்குட பவனியும், சங்காபிஷேகம் அன்னதானமும் ,

21.06.2024 தேர்பவனியும் ,

22.06.2024 தீர்த்தேற்சவம்,  அன்னதானம் திருக்கல்யான பூசையுடன் அன்னதானமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.