மகாபொல , பேசரி கொடுப்பணவை அதிகரிக்க கோரியும், மாணவர்களுக்கான பல்கலைக்கழக விடுதியை வழங்க கோரியுமே இவர்கள் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியில் இன்று ஈடுபட்டனர். களுவன்கேணி பகுதியில் அமைந்துள்ள மாணவர்களின் விடுதி - வீதியில் ஆரம்பமான எதிர்ப்பு பேரணி கொம்மாதுறை பிரதான வீதியை அடைந்து வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகம் வரை சென்றது.
நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்க மாணவர்கள் இந்த எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டிருந்ததுடன், மாணவர்களினால் - விழிப்புணர்வு வீதி நாடகமும் பேரணியின் போது இடம்பெற்றது.
பேரணி பல்கலைக்கழகத்தை அடைந்ததும் பல்கலைக்கழக வளாகத்தில் முன் வீதியோரத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
கையில் பதாதைகளுடன் ஏந்தியவாறு எதிர்ப்பு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து கலைந்து சென்றனர்.










