சிவன்அருள் சாதனையாளர் கௌரவிப்பும் கற்றல் உபகரணங்கள் வழங்கலும்பொங்கல் விழாவும்!!


க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்தலும் மாணவர்களுக்கான கற்றல்உபகரணங்கள் வழங்கலும் பொங்கல் விழா நிகழவும் நேற்று(23) வெள்ளி கிழமை மட்டக்களப்பு - வவுணதீவுபிரதேச செயலாளர் பிரிவின் காஞ்சிரங்குடா கிராமத்தில் அமைந்துள்ள சிவன் அருள் ஹரிதாஸ் இலவசகல்வி நிலையத்தில் இடம்பெற்றது.

பொங்கல் விழா நிகழ்வுகளுடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அதிகஸ்ரபிரதேச கிராமமான காஞ்சிரங்குடா கிராம மாணவர்களின் கல்வி வளர்சியினை நோக்காக கொண்டு சிவன்அருள் பவுண்டேசன் அமைப்பால் நடாத்தப்பட்டு வரும் இவ் இலவச கல்வி நிலையத்தில் கற்று கடந்தஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து பதக்கங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கல்வி நிலையத்தில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கும்நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

அத்துடன் இவ் இலவச கல்வி நிலையத்தில் கற்கும் 150 இற்கும்மேற்பட்ட மாணவர்களுக்கு புத்தக பைகளும் எழுது கருவிகளும் அப்பியாச கொப்பிகளும் வழங்கிவைக்கப்பட்டது.

இத்துடன் இன்நிகழ்வில் அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையினால் நடத்தப்பட்ட தமிழ்த்திறன்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இன்நிகழ்வில் காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலய அதிபர், முனைக்காடு விவேகானந்தா வித்தியாலயஆசிரியர், சிவன் அருள் பவுண்டேசன் அமைப்பின் செயலாளர், அனைத்துலக தமிழர் மேம்பாட்டு பேரவைஇணைப்பாளர்கள், முனைக்காடு விவேகானந்தா வித்தியாலய ஆசிரியர், கல்வி நிலைய ஆசிரியரகள், திருகோணமலை நீனாக்கேணி சிவன் அருள் இளந்தளிர் இலவச கல்வி நிலைய ஆசிரியர்கள், காஞ்சிரங்குடாசமூக மட்ட பிரதிநிகள், கிராம மக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.